Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயிர் வளர்ச்சிக்கு வேர் உட்பூசணம் அவசியம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு

பயிர் வளர்ச்சிக்கு வேர் உட்பூசணம் அவசியம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு

பயிர் வளர்ச்சிக்கு வேர் உட்பூசணம் அவசியம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு

பயிர் வளர்ச்சிக்கு வேர் உட்பூசணம் அவசியம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு

ADDED : மார் 20, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பயிர்களில் வேர் உட்பூசணத்தின் முக்கியத்துவம் குறித்து, விவசாயிகளிடம் கோவை வேளாண் பல்கலை மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, கோவை வேளாண் பல்கலை நான்காமாண்டு மாணவியர், ஆழியார் பகுதியில் தங்கி விவசாயிகளிடம் அனுபவங்களைக் கேட்டறிந்து வருகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, பயிர்களில் வேர் உட்பூசணத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

உயிர் வேம் என்பது பயிர்களின் வேரோடு, கூட்டு வாழ்வு கொண்டுள்ள வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்) எனப்படும் மண்ணில் வாழும் வேர் உட்பூசணம் ஆகும். இது, மண்ணில் உள்ள சத்துக்களை வேர்கள் எடுத்துக் கொள்ள வைக்கும் முக்கிய பணியைச் செய்கிறது.

உயிர் வேம் பூசணம் அதிகரிக்கப்பட்ட வேர்களின் அமைப்புகள் வாயிலாக மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தைக் கரைத்து, பயிர்கள் எடுத்துக் கொள்ளவும், காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தவும் உதவுகிறது. எனவே, உயிர் வேம் ஆனது, பயிர்களின் முக்கிய ஊட்டச்சத்துக்களான மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களான துத்தநாகம், மாங்கனீஸ், இரும்பு, தாமிரம் போன்றவற்றை கிடைக்கச் செய்கிறது. மரத்தின் சுற்றளவை அதிகரித்து, மண்ணின் நீர் இருப்புத் திறனை மேம்படுத்துகிறது.

மண்ணில் பரவும் சில நோய்க்கிருமிகளிடம் இருந்தும், வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களிலும் பயிரைப் பாதுகாக்கிறது. மரத்திற்கு, 50 கிராம் வேமை தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். இதை பிற ரசாயன உரங்களுடன் கலந்து இடக் கூடாது.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us