/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வுமாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு
மாணவர்களுக்கு அரசு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜூலை 30, 2024 11:23 PM

கோவை:அரசுப் போட்டித் தேர்வுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சின்னவேடம்பட்டி, எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியுடன் இணைந்து, சிவில் சர்வீஸ் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது.
சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியை, எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியின் முதல்வர் சார்லஸ் துவக்கி வைத்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வு 2023ல் தனது முதல் முயற்சியிலேயே 175வது ரேங்க் பெற்ற நேஹா, மாணவர்களை ஊக்கமூட்டும் வகையில், தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைமை வணிக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆதித்யா மற்றும் கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் ஆகியோர் அரசுத் துறை வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினர்.
எஸ்.என்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.