/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனத்துறையில் சிறந்த சேவை அலுவலர்களுக்கு விருதுகள் வனத்துறையில் சிறந்த சேவை அலுவலர்களுக்கு விருதுகள்
வனத்துறையில் சிறந்த சேவை அலுவலர்களுக்கு விருதுகள்
வனத்துறையில் சிறந்த சேவை அலுவலர்களுக்கு விருதுகள்
வனத்துறையில் சிறந்த சேவை அலுவலர்களுக்கு விருதுகள்
ADDED : ஜூன் 06, 2025 06:13 AM
கோவை; வனத்துறையில் சிறந்த சேவை புரிந்த கோவை மாவட்ட வனஅலுவலர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழா நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவை புரிந்த வனத்துறை அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், மனித -- வனவிலங்கு மோதல் மேலாண்மையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்க்கு விருது வழங்கப்பட்டது.
அதேபோல், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தில் சிறப்பான சேவை புரிந்ததற்காக கோவை வனக்கோட்ட போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயசந்திரனுக்கு சிறந்த வனச்சரக அலுவலருக்கும் வழங்கப்பட்டது.