/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவுசிகா நீர் கரங்கள் நிறுவனருக்கு விருது கவுசிகா நீர் கரங்கள் நிறுவனருக்கு விருது
கவுசிகா நீர் கரங்கள் நிறுவனருக்கு விருது
கவுசிகா நீர் கரங்கள் நிறுவனருக்கு விருது
கவுசிகா நீர் கரங்கள் நிறுவனருக்கு விருது
ADDED : ஜூன் 07, 2025 01:27 AM

கோவை; கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ்க்கு, தமிழக அரசின் நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் வனத்துறை சார்பில், சென்னையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, இவ்விருதை வழங்கி கவுரவித்தார்.
செல்வராஜ் கூறுகையில், ''மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அரசு விருது வழங்குவது, நல்ல முன்னெடுப்பு. நீர் நிலைகளில் குப்பையை கொட்டக்கூடாது; கழிவு நீரை சேர்ப்பிக்கக் கூடாது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நீர் நிலைகளை தற்போதுள்ள அளவுக்காவது காப்பாற்ற வேண்டும். நீர் நிலைகளை மீட்டெடுக்கும்போது, அரசு துறையினர் அளவீடு செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.