/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலாஅட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா
அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா
அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா
அட! பெட்ஸ்களுக்கும் ஸ்கூலா? தினமும் போறாங்க கூலா
UPDATED : ஜன 13, 2024 02:47 AM
ADDED : ஜன 13, 2024 02:15 AM

நம்மூர்ல குழந்தைங்க ஸ்கூலுக்கு போக பஸ் வரும். ஆனா அமெரிக்காவுல, நாய்க்குட்டிகள் பள்ளிக்கூடம் போறாங்க. ஹாரன் ஒலியோடு வந்து நிற்கும் பஸ்ஸில, ஆர்வத்தோட ஏறும் இந்த செல்லபிராணிகள், தங்களுக்கான 'சீட்'டில் போய் அமருகின்றன.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் வரும் பிரண்ட்ஸ்களுக்கு 'ஹாய்' சொல்லியபடி பயணிக்கின்றனர். சீட் பெல்ட் போட்டுவிட்டு, ஸ்நாக்ஸ் கொடுக்கப்படுகிறது. ஸ்கூல் வந்ததும், நீச்சல் கற்பது, வெளியிடங்களுக்கு வாக்கிங் செல்வது, அறைக்குள் எப்படி நடந்துக்கறதுன்னு சொல்லி கொடுக்குறாங்க.
பெட்ஸ் ஓனர்களுக்கு பராமரிப்பு வேலையை குறைக்க, செல்லபிராணிகளுக்கு இந்த பள்ளியில் டிரெயினிங் கொடுக்கறது தான் ஸ்கூல் சிலபஸ். மதியம் பள்ளி முடிந்ததும், மீண்டும் பஸ்ஸில் செல்லபிராணிகள் வீடு திரும்புவது போன்ற காட்சிகள், பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.