/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆட்டோ திருடன் கைது; இரு ஆட்டோக்கள் மீட்பு ஆட்டோ திருடன் கைது; இரு ஆட்டோக்கள் மீட்பு
ஆட்டோ திருடன் கைது; இரு ஆட்டோக்கள் மீட்பு
ஆட்டோ திருடன் கைது; இரு ஆட்டோக்கள் மீட்பு
ஆட்டோ திருடன் கைது; இரு ஆட்டோக்கள் மீட்பு
ADDED : ஜூன் 25, 2025 11:12 PM

கோவை; காந்திமாநகர் பகுதியை சேர்ந்த ஜெயலிங்கராஜா என்பவர், கடந்த 20ம் தேதி பெருமாள் கோவில் ரோட்டில், ஜெபா ஸ்டோர்ஸ் அருகில் நிறுத்தியிருந்த ஆட்டோ திருடு போனதாக சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆட்டோ திருடப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். ஆட்டோவை திருடிச்சென்ற நபர், போலி பதிவு எண் பயன்படுத்தி, கீரணத்தம் பகுதியில் ஆட்டோவை ஓட்டி வந்தது தெரியவந்தது.
போலீசார் கீரணத்தம் பகுதிக்கு சென்று, ஆட்டோ திருடிய நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் மத்தம்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன், 32 என்பதும், ஆட்டோக்களை குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. பாலமுருகன் திருடிய இரண்டு ஆட்டோக்களை போலீசார் மீட்டனர். பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.