/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க...பெற்றோரே... பள்ளிக்கு வாங்க!வீடுவீடாக அழைப்பிதழ் வினியோகம்விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க...பெற்றோரே... பள்ளிக்கு வாங்க!வீடுவீடாக அழைப்பிதழ் வினியோகம்
விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க...பெற்றோரே... பள்ளிக்கு வாங்க!வீடுவீடாக அழைப்பிதழ் வினியோகம்
விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க...பெற்றோரே... பள்ளிக்கு வாங்க!வீடுவீடாக அழைப்பிதழ் வினியோகம்
விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க...பெற்றோரே... பள்ளிக்கு வாங்க!வீடுவீடாக அழைப்பிதழ் வினியோகம்
ADDED : ஜூலை 30, 2024 01:20 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க, பெற்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 20 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு வாயிலாக, கல்வி உரிமைச் சட்டம், இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை, பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆண்டுதோறும் வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த கட்டமைப்பு மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதன்படி, நடப்பாண்டு பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக வரும், 2ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோருக்கு அழைப்பு விடுக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்து, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து, பெற்றோரிடம் தெரிவிக்க கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என ஆசிரியர்கள் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி தொப்பம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் கணேசன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
நான்கு கட்டம்
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதற்கான விழிப்புணர்வுகூட்டம் நடத்துவது குறித்து, நாளைக்குள் (31ம் தேதி) பெற்றோருக்கு அழைப்பு கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புக்காக, முதற்கட்டமாக வரும், 2ம் தேதி காலை, பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மறு கட்டமைப்புக்காக நிகழ்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பின், முதல், 50 சதவீதம் தொடக்கப் பள்ளிகளுக்கு, வரும் ஆகஸ்ட் 10ம் தேதியும், மீதம் உள்ள, 50 சதவீதம் தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆக., 17ம் தேதியும் மறுகட்டமைப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வரும், 24ம் தேதியும், நடுநிலைப்பள்ளிகளுக்கு, 31ம் தேதியும் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.