/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி; பொள்ளாச்சிக்கு இடமாறியது குட்டி யானை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி; பொள்ளாச்சிக்கு இடமாறியது குட்டி யானை
தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி; பொள்ளாச்சிக்கு இடமாறியது குட்டி யானை
தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி; பொள்ளாச்சிக்கு இடமாறியது குட்டி யானை
தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி; பொள்ளாச்சிக்கு இடமாறியது குட்டி யானை
ADDED : ஜூன் 13, 2025 10:00 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில், தாயை பிரிந்த குட்டி யனையை, கடந்த 18 நாட்களாக தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நேற்று சிறுமுகை வனச்சரக பகுதியில் இருந்து பொள்ளாச்சி கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு குட்டி யானை மாற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மாதம் 26ம் தேதி தாயை பிரிந்த நிலையில் குட்டி யானை மீட்கப்பட்டது. சிறுமுகை வனச்சரக வனப்பகுதிகள் மற்றும் கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரக வனப்பகுதிகளில் குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, யானைக் கூட்டம் வனப்பகுதிகளில் தென்படவில்லை. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி நேற்று முன் தினம் வரை நடைபெற்றது.
தாய் யானை கிடைக்காததால் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. மேலும் தாயை பிரிந்த யானை, சரியான முறையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாததால், உடல் மெலிந்து காணப்பட்டு வந்தது.
இதனிடையே, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ஆணைப்படி, குட்டி யானை, சிறுமுகை வனப்பகுதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு நேற்று காலை 5 மணிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.----