/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆசிய சிலம்ப போட்டி; கோவை மாணவர்கள் அசத்தல்ஆசிய சிலம்ப போட்டி; கோவை மாணவர்கள் அசத்தல்
ஆசிய சிலம்ப போட்டி; கோவை மாணவர்கள் அசத்தல்
ஆசிய சிலம்ப போட்டி; கோவை மாணவர்கள் அசத்தல்
ஆசிய சிலம்ப போட்டி; கோவை மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 05, 2024 12:58 AM
கோவை;கன்னியாகுமரியில் நடந்த ஆசிய அளவிலான சிலம்பப்போட்டியில், கோவையை சேர்ந்த வீரர் வீராங்கனைகள், 41 பதக்கங்கள் வென்றனர்.
அகில இந்திய சிலம்பாட்ட சம்மேளனம் சார்பில், 5வது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில், குத்துவரிசை, அலங்கார வீச்சு, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், ஆயுத ஜோடி, நேரடி சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில் கோவை சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவ மாணவியர் 16 பேர் பங்கேற்று, 21 தங்கம், 10 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என 41 பதக்கங்கள் வென்றனர்.
வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்:
மினி சப் ஜூனியர் மாணவர் பிரிவில் சஞ்ஜித் (ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி) 3 தங்கம், சச்சின் ஆலிவர் (கார்மல் கார்டன் பள்ளி) 3 தங்கம்; சப் ஜூனியர் மாணவியர் பிரிவில் நேத்ரா ஸ்ரீ (வி.சி.வி., ஷிசு வித்யோதயா) 2 தங்கம், 1 வெள்ளி, ஜாக்குலின் நேத்ரா (அல்வேர்னியா) 2 வெள்ளி, சுவர்ணிகா (காந்திமாநகர் அரசு பள்ளி) 2 வெள்ளி; சப் ஜூனியர் மாணவர் பிரிவில் ஹரிதிக்கிஷன் (வித்யா நிகேதன் பள்ளி) 3 தங்கம், தருண் (வித்யா நிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி) 2 தங்கம், 1 வெண்கலம், நவுனீத் (ஆர்.கே ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளி) 1 தங்கம், 1 வெண்கலம், ராகுல் (ஜி ராமசாமி மெட்ரிக்.,) 2 தங்கம், 1 வெண்கலம், ரூபேஸ் (இந்துஸ்தான் மெட்ரிக்.,) 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்; ஜூனியர் மாணவியர் பிரிவில் அக்க்ஷதா (நேஷனல் மாடல் பள்ளி) 2 தங்கம், 1 வெள்ளி, நிதர்சனா (காந்திமாநகர் அரசு பள்ளி) 1 தங்கம், 2 வெள்ளி, ஜெஸ்லின் (செயின்ட் ஜோசப் மெட்ரிக்., பள்ளி) 2 வெள்ளி, 1 வெண்கலம்; ஆண்கள் பிரிவில் மித்ரேஷ்ராம் (கார்மல் கார்டன்) 1 தங்கம், 1 வெண்கலம், நிகிலேஷ் (ஸ்டேன்ஸ் பள்ளி) 1 வெண்கலம், சர்வேக் ஷ்(ஸ்டேன்ஸ் பள்ளி) 1 வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம் செயலாளர் சுதாகர், சிலம்பலாயா தலைமை ஆசிரியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.