/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆஷா பணியாளர்கள் தின விழா; கேக் வெட்டி கொண்டாட்டம் ஆஷா பணியாளர்கள் தின விழா; கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆஷா பணியாளர்கள் தின விழா; கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆஷா பணியாளர்கள் தின விழா; கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆஷா பணியாளர்கள் தின விழா; கேக் வெட்டி கொண்டாட்டம்
ADDED : செப் 23, 2025 10:39 PM

வால்பாறை; வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆஷா பணியாளர்கள் சார்பில் 'ஆஷா பணியாளர்கள் தின விழா' நடந்தது.
அரசு கலைக்கல்லுாரி கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்கு ஆஷா பணியாளர்கள் கலைவாணி, ஜெயலட்சுமி, கமலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஆஷா பணியாளர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டது.
விழாவை துவக்கி வைத்து வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசும் போது, 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில் கடும் சிரமத்திற்கு இடையே பணிபுரியும் ஆஷா பணியாளர்களின் சேவை பாராட்டுதலுக்கு உரியது. சேவை மனப்பான்மையோடு, மக்களோடு மக்களாக இணைந்து, ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கர்ப்பிணிகளை அழைத்து வந்து, அவர்களுக்கு சுகப்பிரசவமாகும் வரை தொடர்ந்து கண்காணித்து, தாய்மார்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்,' என்றார்.
விழாவில், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன், டாக்டர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.