/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோடை காலம் துவங்கியதால் மூடாக்கு அமைப்பது அவசியம்கோடை காலம் துவங்கியதால் மூடாக்கு அமைப்பது அவசியம்
கோடை காலம் துவங்கியதால் மூடாக்கு அமைப்பது அவசியம்
கோடை காலம் துவங்கியதால் மூடாக்கு அமைப்பது அவசியம்
கோடை காலம் துவங்கியதால் மூடாக்கு அமைப்பது அவசியம்
ADDED : பிப் 23, 2024 10:39 PM
பொள்ளாச்சி:மாவட்ட விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்க, மூடாக்கு அமைக்க வேண்டுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை வருமாறு:
வறண்ட வானிலையுடன், வெப்பநிலை அதிகமாக உள்ளதால், மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து பயிர்களுக்கு போதிய அளவில் நீர் பாய்ச்ச வேண்டும். கால்நடைகளுக்கு நாவறட்சியை போக்க, சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும்.
தற்போதுள்ள வானி லை, நெல் நடவுசெய்வதற்கும், கரும்பு நடவு செய்யவும் ஏற்ற வானிலையாகும். நெல் சாகுபடி செய்வோர் நெல் நாற்றுகளை நடவு செய்யலாம், கரும்பு கரணையை நடவு செய்யலாம்.
கோடை காலம் துவங்கி உள்ளதால், தென்னை, கோகோ, ஜாதிக்காய் போன்ற அதிக இடைவெளி உள்ள மரங்களில், சூரிய ஒளி மண்ணில் விழுந்து ஈரப்பதம் விரைவாக குறைகிறது. இதை தவிர்க்க, அடி மர பகுதியில், கழிவுகளைக்கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும்.
மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்க, மூடாக்கு காப்பதுடன், கழிவுகள் மக்கிப்போய் பயிர்களுக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. தற்போது நிலவும் வானிலையால், கோழிகளுக்கு 'ராணிகட்' நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோழிகளை கால்நடை மருத்துவமனை கொண்டு சென்று உரிய நேரத்தில், தடுப்பூசி போட வேண்டும். ஆடு, மாடு, கோழிகளுக்கு குடிநீர் வழங்கி, அவை இருக்கும் இடத்தில் தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.