/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு
கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு
கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு
கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு
ADDED : செப் 11, 2025 10:08 PM
மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், 363 பயனாளிகளுக்கு ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தேக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் 27 வீடுகள், கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் 28 வீடுகளை கலெக்டர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த வீடுகள் கட்டப்பட்டு வரும் இடங்களில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வடிகால் வசதி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர் பவன்குமார் பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.