/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பக்திக்கும், படைப்புக்கும் பாலமாகும் கலைஞர்கள் பக்திக்கும், படைப்புக்கும் பாலமாகும் கலைஞர்கள்
பக்திக்கும், படைப்புக்கும் பாலமாகும் கலைஞர்கள்
பக்திக்கும், படைப்புக்கும் பாலமாகும் கலைஞர்கள்
பக்திக்கும், படைப்புக்கும் பாலமாகும் கலைஞர்கள்
ADDED : ஜூன் 21, 2025 12:23 AM

கோவை வடவள்ளியை சேர்ந்த காமராஜ், பேரூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் உள்ளிட்ட சிலர் பாரம்பரியமாக கோவில்களுக்கு கலசங்கள், கவசங்கள், பிரபாவலி, சிலைகளை செய்து வருகின்றனர்.
பேரூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ஹரிதாஸ் கூறுகையில், ''பித்தளை, செம்பு, வெள்ளியில் கோவில் சார்ந்த பொருட்களை தயாரித்து, மைக்ரோ பிளேட்டிங் செய்து கொடுக்கின்றோம். சாமி கிரீடம், திரிசூலம், கடவுளின் வாகனங்களை ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுக்கின்றோம்.
செம்பு ஷீட் மொத்தமாக வாங்கி, அதில் வாடிக்கையாளர்கள் கேட்கும் உருவத்தை வரைந்து டிசைன் செய்கின்றோம். பித்தளை பொருட்களை அச்சுகள் உதவியுடன் செய்து தருகிறோம்' என்றனர்.
காமராஜ் கூறுகையில், ''எனது மாமாவிடம் இருந்து இக்கலையை கற்றுக்கொண்டேன். 28 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறேன். கோவிலுக்கு தேவையான நிலவு, கடவுள் சிலைகளை தேவையின்படி, ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம்.
ஒரு பொருளை தயார் செய்வதற்கு, 10 முதல் 30 நாட்கள் வரை தேவைப்படும். சிலைகள் செய்வது பெரிதல்ல; அதன் வடிவங்கள் சரியாக வரவேண்டும். அரசு தரப்பில் தொழிலை மேம்படுத்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்,'' என்றார்.