/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராஜவாய்க்கால் புதரில் தீ வைப்பு; மர்மநபர்கள் அட்டகாசம் ராஜவாய்க்கால் புதரில் தீ வைப்பு; மர்மநபர்கள் அட்டகாசம்
ராஜவாய்க்கால் புதரில் தீ வைப்பு; மர்மநபர்கள் அட்டகாசம்
ராஜவாய்க்கால் புதரில் தீ வைப்பு; மர்மநபர்கள் அட்டகாசம்
ராஜவாய்க்கால் புதரில் தீ வைப்பு; மர்மநபர்கள் அட்டகாசம்
ADDED : ஜூன் 11, 2025 09:24 PM

மடத்துக்குளம்; மடத்துக்குளம் அருகேயுள்ள, காரத்தொழுவு ராஜவாய்க்கால் மற்றும் கரைப்பகுதியில் புதர்கள் மண்டி காணப்படுகின்றது. அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வாய்க்காலை துார்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கால்வாய் கரையிலுள்ள புதர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், அருகிலுள்ள தென்னை மரங்கள் மற்றும் பலன் தரும் மரங்கள் தீயில் எரிந்து கருகியது. இது குறித்து தகவல் கிடைத்ததும், மடத்துக்குளம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வாய்க்கால் கரையில், மது அருந்தி விட்டு, தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், காரத்தொழுவு ராஜவாய்க்கால் முழுமையும் துார்வார வேண்டும். என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.