ADDED : அக் 02, 2025 11:49 PM

வடவள்ளி;மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நவராத்திரி விழாவையொட்டி, செப்., 22ல் கொலு வைக்கப்பட்டது.
நாள்தோறும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விஜயதசமியான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, பகல் 12 மணிக்கு, விஜயதசமி விழாவின் முக்கிய நிகழ்வாக, சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோயிலைச் சுற்றி, அம்பு சேர்வை நடந்தது. கோயில் தக்கார் ஜெயக்குமார், துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


