/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா? அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
ADDED : ஜூன் 15, 2025 10:22 PM

போத்தனூர்; கோவை, மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் அணைக்கட்டு ஒன்று உள்ளது. மதுக்கரை மார்க்கெட் சாலையிலிருந்து, குரும்பபாளையம் செல்லும் வழியிலுள்ள இந்த அணைக்கட்டில் நீர் நிறைந்தால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பலவித விவசாயமும் மேற்கொள்ளப்படும்.
இந்த அணைக்கட்டிற்கு மஞ்சிப்பள்ளம் வழியே நீர் வரும். தற்போது அணைக்கட்டில் நீர் நிறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. நீரில் நுரை ஏற்பட்டு. காற்றில் பறக்கிறது. அவ்வழியே செல்வோர் மீது நுரை படுகிறது.
மக்கள் கூறுகையில், 'அணைக்கட்டு நீரில், தொழிற்சாலை ரசாயனம் கலந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டும் இதுபோல், ரசாயனம் கலந்து, மீன்கள் உயிழந்தன. இங்கு கால்நடைகளும் மேயும். அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.