Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில் புது ரக பட்டுப்புடவை அறிமுகம் -

ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில் புது ரக பட்டுப்புடவை அறிமுகம் -

ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில் புது ரக பட்டுப்புடவை அறிமுகம் -

ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில் புது ரக பட்டுப்புடவை அறிமுகம் -

ADDED : செப் 20, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம் : கோவை, தடாகம் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில், விழாக்கால பட்டுச்சேலைகள் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நடப்பாண்டு, விழாக்கால கொண்டாட்டத்துக்காக ஆரெம்கேவி சில்க்ஸ் சார்பில் சிறப்பு பட்டுச்சேலை படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆரெம்கேவி சில்க்ஸ் இயக்குனர்கள் சங்கர் குமாரசாமி, மகேஷ் ஆகியோர் கூறியதாவது:

நுாறாண்டுகளாக, 110க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப்புடவை ரகங்களை அறிமுகம் செய்த ஆரெம்கேவி, 101ம் ஆண்டில் இந்த விழா காலத்தில், ராசலீலா பட்டுப்புடவை, டபுளா லினோ வர்ணா, ஜப்பான் கோர்வை, இயற்கை வண்ண செவ்வந்திப் பூ, திரிகோண மாம்பழ புட்டா உள்ளிட்ட, 15 புதிய பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்கிறது.

இப்புடவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஆரெம்கேவியின், 3 கிளைகளோடு, தி.நகர் பனகல் பூங்கா, வடபழனி நெக்ஸஸ் விஜயா மால், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, வேளச்சேரி மற்றும் திருநெல்வேலி, கோவை, பெங்களூரு ஆகிய கிளைகளில் விற்பனைக்கு உள்ளன.

கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில், 'மாடர்னைஸ்டு நுமேடிக் ஹேண்ட்லுாம்' பெண்களும் எளிதாக நெய்யும் விதமாக, புதியதொரு தறியை வடிவமைத்து நெசவாளர்களுக்கு அர்ப்பணித்துள்ளோம்.

நெசவாளர்களின் குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும், ஆரெம்கேவி என்றென்றும் துணை நிற்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us