/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : செப் 11, 2025 10:06 PM

வடவள்ளி; கல்வியோடு, மாணவர்களின் செயல்திறனை வளர்க்கும் வகையில், ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி மற்றும் நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பு இணைந்து, ஜூனியர் ஐன்ஸ்டீன் டிராக் 2025 என்ற போட்டி நடத்தின. உலகளவிலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற இறுதிப்போட்டி, மலேசியாவில் உள்ள யு.கே.எம்., பல்கலையில் நடந்தது.
காளப்பநாயக்கன்பாளையம் ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளியின் பிளஸ் 2 மாணவர்கள் அம்ருத், சஞ்சித், கிருதிவ் ஜெயராம், சஞ்சய் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, 1,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக, கோவையில், ரோட்டரி கிளப் ஆப் மேற்கு சார்பில் நடத்தப்பட்ட 'பிக்பேங் 2025 தி கிரேட் ரோட்டரி இன்னோவேஷன் சவால் 2025' என்ற போட்டியில் முதலிடம் பிடித்து, 40 ஆயிரம் ரூபாய் பரிசாக வென்றனர்.
இம்மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் ஆனந்தன், மாணவர்களை பாராட்டி, பொன்னாடை அணிவித்து, கவுரவித்தார். இக்காலத்தில், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும், மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.