/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கற்றல், குணம் மற்றும் திறனுக்கு அனுக்ரஹா மந்திர் பள்ளி கற்றல், குணம் மற்றும் திறனுக்கு அனுக்ரஹா மந்திர் பள்ளி
கற்றல், குணம் மற்றும் திறனுக்கு அனுக்ரஹா மந்திர் பள்ளி
கற்றல், குணம் மற்றும் திறனுக்கு அனுக்ரஹா மந்திர் பள்ளி
கற்றல், குணம் மற்றும் திறனுக்கு அனுக்ரஹா மந்திர் பள்ளி
ADDED : செப் 25, 2025 12:32 AM
கு ழந்தைகளுக்கு நல்ல குணம், அறிவு, திறமை மற்றும் மனித நேயத்தை வளர்க்கும் பள்ளியாக அனுக்ரஹா மந்திர் செயல்பட்டு வருவதாக, பள்ளி தாளாளர் ஷோபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை கற்பிக்கிறோம். கல்வியில் சிறந்து விளங்கவும், விளையாட்டில் சாதிக்கவும், திறன் மேம்படவும் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.
தேசபக்தி, பெரியவர்களை மதிக்கும் மனப்பான்மை, இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் பண்பையும் கற்றுத்தருகிறோம். பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்திஆகிய மூன்று மொழிகளிலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் ஆங்கிலம் பேசும் நடைமுறையை பின்பற்றி, குழந்தைகளின் தொடர்புத்திறனை மேம்படுத்துகிறோம்.
போனிக்ஸ் முறையில் ஆங்கில வாசிப்பு திறன் வளர்க்கப்படுகிறது. தாய்மொழியை வலுப்படுத்த தமிழில் பாடல்கள், கதைகள் கற்றுத்தரப்படுகிறது.
ஹிந்தி மொழி அடிப்படை அறிமுகம் வாயிலாக குழந்தைகளின் பன்மொழித்திறனை விரிவுபடுத்துகிறோம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அன்பான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
துாய்மையான மற்றும் பாதுகாப்பான வளாகம், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்; வண்ணமயமான, குழந்தைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள்; விளையாட்டு மையம், கலை மற்றும் இசை அரங்குகள்; டிஜிட்டல் லேர்னிங், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற தொழில்நுட்பத்துடன் இணைந்து கல்வி கற்பித்து வருகிறோம். கலை, கைவினை, நடனம், பாடல், யோகா, கதை சொல்லல், நடித்துக்காட்டுதல் போன்ற செயல்முறை கற்றல் முறைகளில் குழந்தைகளின் திறனை மேம்படுத்துகிறோம்.
பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சியை அறிந்து கொள்ள பெற்றோர், ஆசிரியர் சந்திப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.