/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருள் எதிர்ப்பு தினம்; கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு போதை பொருள் எதிர்ப்பு தினம்; கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு
போதை பொருள் எதிர்ப்பு தினம்; கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு
போதை பொருள் எதிர்ப்பு தினம்; கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு
போதை பொருள் எதிர்ப்பு தினம்; கல்லுாரிகளில் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 26, 2025 11:33 PM
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள கல்லுாரிகளில், சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உலகம் முழுவதும், ஆண்டுதோறும், ஜூன் 26ம் தேதி, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, போதை விழிப்புணர்வு மன்றம் சார்பில், 'போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
அதேபோல, நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கலைமகள் கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் மாலா மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அனைவரும், போதைப் பொருளை முற்றிலும் ஒழிப்போம். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.