/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.1.47 லட்சம் சிக்கியது லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.1.47 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.1.47 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.1.47 லட்சம் சிக்கியது
லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.1.47 லட்சம் சிக்கியது
ADDED : மே 29, 2025 12:49 AM

போத்தனுார் : கோவை -- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கரை மரப்பாலம் அடுத்து ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி உள்ளது. கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு இங்கு முத்திரையிடப்படும். நேற்று அதிகாலை, 5:20 மணிக்கு, அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையிட்டதில், 1 லட்சத்து, 47,560 ரூபாயை கைப்பற்றினர்.
அங்கு பணியில் இருந்த போலீசார் சதீஷ் ஜெயச்சந்திரன், 48, லோகநாதன், 39, ஆகியோரிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர். இதே போல, தமிழக - கேரளா எல்லையில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில், ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடியில், நேற்று அதிகாலை, துணை ஆய்வுக்குழு அலுவலர் சங்கீதா, லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கணக்கில் வராத, 66,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணியில் இருந்த, மோட்டார் வாகன ஆய்வாளர் தமிழ்செல்வி, உதவியாளர் சிவகுரு ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.


