/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு
கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு
கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு
கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு
ADDED : மே 23, 2025 11:51 PM
தொண்டாமுத்தூர் : கரடிமடை வனப்பகுதியில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட, கரடிமடை பிரிவு, யானைகள் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில், நேற்றுமுன்தினம், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார், 45 வயதுடைய பெண் யானை, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கீழே படுத்துக்கிடந்தது. வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இரண்டாம் நாளாக நேற்றும், சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் நேற்று மாலை, பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியிலேயே யானையின் உடலை புதைத்தனர். பிரேத பரிசோதனையில், கர்ப்பப்பையில் சீல் கட்டி சத்துக்குறைபாடு மற்றும் உடல் தசைகள் மிகவும் மெலிந்து, உள்ளுறுப்புகள் செயலிழந்து, இதய அதிர்ச்சி ஏற்பட்டு, யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த மூன்று நாட்களில், கோவை வனக்கோட்டத்தில், உயிரிழந்த இரண்டாவது யானை இது என்பது குறிப்பிடத்தக்கது.