/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னுார் குளம் கழிவுகளால் மாசு! விவசாயிகள் அதிருப்திஅன்னுார் குளம் கழிவுகளால் மாசு! விவசாயிகள் அதிருப்தி
அன்னுார் குளம் கழிவுகளால் மாசு! விவசாயிகள் அதிருப்தி
அன்னுார் குளம் கழிவுகளால் மாசு! விவசாயிகள் அதிருப்தி
அன்னுார் குளம் கழிவுகளால் மாசு! விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 05, 2024 11:16 PM

அன்னுார்:அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் குளம் கழிவுநீர் மற்றும் ஆகாயத்தாமரையால் மாசுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுாரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் 30க்கும் மேற்பட்ட முறை அத்திக்கடவு திட்டத்தில் சோதனை ஓட்டமாக நீர் விடப்பட்டுள்ளது.
இத்துடன் கனமழையாலும் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து அதிக அளவு மழை நீர் குளத்திற்கு வந்துள்ளது. தற்போது 70 சதவீதம் அளவுக்கு குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் இதனால் ஒரு சதவீதம் கூட பயன் இல்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அன்னூர் விவசாயிகள் கூறியதாவது :ஒட்டர்பாளையம் ஊராட்சியில், அல்லிக்காரம்பாளையம், ஜீவா நகர், ஒட்டர்பாளையம், அழகாபுரி நகர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவுநீர் வடிகட்டப்படாமல் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே அன்னுார் குளத்திற்கு செல்கிறது.
இத்துடன் அன்னுார் பேரூராட்சியில் கோவை சாலை, மேட்டுப்பாளையம் சாலை, ஓதிமலை சாலையிலிருந்து சாக்கடை கழிவு நீர் குழாய் பதிக்கப்பட்டு குளத்திற்குள் தினமும் பல்லாயிரம் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது.
மேலும் அடிக்கடி இரவு நேரத்தில், கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் குளத்தின் கரைகளில் கொட்டப்படுகிறது. அன்னுார் பேரூராட்சி குப்பைகளும் வடக்கு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் குளத்தில் 50 சதவீதம் கழிவு நீர் நிரம்பி உள்ளது.
இந்த கழிவு நீரால், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. குளத்தில் நீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. அன்னுார் குளத்தில் தினமும் பல்லாயிரம் லிட்டர் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும்.
குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் அன்னுார் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்து நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.