/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்னுார் விவசாயிகள் ஹைதராபாத் பயணம் அன்னுார் விவசாயிகள் ஹைதராபாத் பயணம்
அன்னுார் விவசாயிகள் ஹைதராபாத் பயணம்
அன்னுார் விவசாயிகள் ஹைதராபாத் பயணம்
அன்னுார் விவசாயிகள் ஹைதராபாத் பயணம்
ADDED : ஜூன் 25, 2025 10:41 PM
அன்னுார்; அன்னுார் விவசாயிகள், 20 பேர் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விவசாய விளை பொருட்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். வருமானத்தை இரு மடங்காக்க வேண்டும். நோய் பாதிப்பிலிருந்து பயிர்களை காக்க வேண்டும், என்பதற்காக, வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பட்டறிவு பயணம் விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்படி 'அட்மா' திட்டத்தின் கீழ், ஹைதராபாத், ராஜேந்திரா நகரில் உள்ள, சிறுதானியங்களுக்கான உலகளாவிய மேம்பாட்டு மையத்திற்கு அன்னுார் பகுதியைச் சேர்ந்த 20 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து குப்பனுார் விவசாயிகள் கூறியதாவது:
வேளாண் அதிகாரிகள் மூவர், விவசாயிகள் 20 பேர், ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றிருந்தோம். சிறுதானியத்தில், பாரம்பரிய விதைகள், வீரிய ரக விதைகள், வறட்சியை தாங்கி வளரும் ரகங்கள் என பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது. உற்பத்தி திறனை அதிகரிக்க, நோய் தாக்குதலை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை அங்குள்ள பேராசிரியர்கள் விளக்கினர்.
பூச்சி நோய் மேலாண்மையை எளிதில் கையாள கற்றுக் கொடுத்தனர். சிறுதானியம் பயிரிடுவதால் அதிக வருமானம் பெறலாம், இவ்வாறு விவசாயிகள் கூறினர்.