/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாபி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : ஜன 30, 2024 10:32 PM

பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 19ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர்கள் டாக்டர் பி.ஜி. விஸ்வநாதன், டாக்டர் அருணா விஸ்வநாதன் மற்றும் டாக்டர் அஞ்சனா விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொது முடக்க காலத்துக்கு பிறகு, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை, பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் கொண்ட பழக்க வழக்கங்கள், எதிர்கால வாழ்க்கைக்கு பாதிப்பாக அமைந்து விடும். இதை பெற்றோர் உரிய நேரத்தில் கவனித்து, அவற்றை தடுக்க வேண்டும், என்றார் விழாவையொட்டி, சீனிவாச கல்யாணம் நாடகம், பாரம்பரிய கலை நடனங்கள், கதகளி, யோகா உள்ளிட்டவை நடந்தன.
தொடர்ந்து, பொது தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.