Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் கடைகளில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் படத்துடன் போஸ்டரை ஒட்டி, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்திலுள்ள டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று கூறி, கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டம் நடத்த முயன்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின், விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, 'டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும்; போராட்டம் தேதி சொல்லாமல் நடத்தப்படும்,' என்றும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்பேரில், கோவை தெற்கு மாவட்டத்தில், பா.ஜ., மகளிரணி சார்பில் டாஸ்மாக் கடை ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் கடையின் முகப்பு பகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டி, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த போஸ்டரில், 'இக்கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை,' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க.,வினரின் இந்த செயலால், இரு கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலேயே, பாட்டிலுக்கு 10 ரூபாயுடன், குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொள்ளாமல், தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us