Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெற்றோர் இல்லாத சிறுவர்களை வாரியணைக்கிறது அன்பு இல்லம்

பெற்றோர் இல்லாத சிறுவர்களை வாரியணைக்கிறது அன்பு இல்லம்

பெற்றோர் இல்லாத சிறுவர்களை வாரியணைக்கிறது அன்பு இல்லம்

பெற்றோர் இல்லாத சிறுவர்களை வாரியணைக்கிறது அன்பு இல்லம்

ADDED : மே 11, 2025 12:19 AM


Google News
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்படும் சத்குரு சேவாஸ்ரமம் அறக்கட்டளை, தாய் அல்லது தந்தை இல்லாத அல்லது இருவரையும் இழந்த, ஏழ்மை நிலை கொண்ட சிறுவர்களுக்காக, சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

11 முதல் 13 வயதுக்குட்பட்ட, அதாவது 6வது வகுப்பு முதல் 8வது வகுப்பு வரை கல்வி பயில விரும்பும் ஆண் சிறுவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, கல்வி, தொழிற்கல்வி மற்றும் பராமரிப்பு வழங்கப்படும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்களின் தாயார், தந்தை அல்லது பாதுகாவலர்கள், வெள்ளைத் தாளில் மாணவனின் மற்றும் குடும்பத்தின் பின்னணியை விரிவாக எழுதி பதிவு செய்யலாம். கிராமப்புறங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை மே 25ம் தேதிக்குள், 'நிர்வாக அறங்காவலர், சத்குரு சேவாஸ்ரமம், எண் -30, வெங்கடசாமி சாலை (கிழக்கு), ஆர்.எஸ்.புரம், கோவை - 641002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0422- 2552034 / 83002 07034 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us