ADDED : ஜன 11, 2024 12:25 AM

கோவை : ஒத்தக்கால்மண்டபம், அக்சயா மேலாண்மையியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்கள் வாசன் ஐ கேர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை கண் மருத்துவர் பிரேம்ராஜ், பாரதியார் பல்கலை முன்னாள் பேராசிரியர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் மோகன் ஆகியோர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
பல்கலைக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவித்தனர்.
கல்லுாரியின் தலைவர் கலாவதி, துணை முதல்வர் பிருந்தா, மேலாண்மையியல் துறை முதல்வர் ராஜசேகர், அக்சயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் கனகரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.