ADDED : ஜன 29, 2024 12:37 AM

துடியலூர்:துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள, அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா, மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா ஆகியன நடந்தன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் செயலாளர் விஜயகுமார், கவுரவ விருந்தினராக டாக்டர் ப்ரீத்தி சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மழலைகளுக்கு, பட்டமளிப்பு விழா நடந்தது. வில்லுப்பாட்டு, ராம்லீலா, அலாவுதீன் நாடகம், ஹிந்தி நாடகம், சமையலறை நடனம், தனித்துவமான நவீன நடனங்கள் உட்பட, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.