/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆகாஷ் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை ஆகாஷ் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
ஆகாஷ் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
ஆகாஷ் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
ஆகாஷ் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை
ADDED : ஜூன் 17, 2025 11:10 PM

கோவை; எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவு கடந்த 14ம் தேதி வெளியாகியது.
இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான, ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் கோவை மாணவர்கள், மதுநந்தன் மற்றும் கவின் ஆகியோர் நீட் இளநிலை தேர்வில், தேசிய அளவில் முன்னணி இடத்தை பிடித்துள்ளனர். மிகச்சிறந்த தரவரிசையுடன், மதுநந்தன் 619 மற்றும் கவின் 1996 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த மாணவர்கள், நீட் தேர்வுகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏ.இ.எஸ்.எல்., வகுப்பறை திட்டத்தில் சேர்ந்திருந்தனர்.
மாணவர்கள் கூறுகையில், ''கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம், நிபுணத்துவம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல்கள், எங்களுக்கு சிக்கலான தலைப்புகளை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக கையாள உதவின. ஏ.இ.எஸ்.எல்., இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை,'' என்றனர்.