ADDED : பிப் 06, 2024 03:09 AM

கோவை,: கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' நிறுவனத்தின் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் விளம்பரத்தை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நிறுவனத்துக்கு ஆதரவாக கடந்த, 30ம் தேதி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில், 10,000 பேர் திரண்டு போராடினர்.
நிறுவன உரிமையாளரான கோவை பீளமேட்டை சேர்ந்த சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணைக்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் சத்தியானந்த் நேற்று ஆஜரானார்.
அவரிடம் போலீசார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.