/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வான் பரப்பு பாதுகாப்பில் கவனம்; விமானப்படை அதிகாரி பேச்சு வான் பரப்பு பாதுகாப்பில் கவனம்; விமானப்படை அதிகாரி பேச்சு
வான் பரப்பு பாதுகாப்பில் கவனம்; விமானப்படை அதிகாரி பேச்சு
வான் பரப்பு பாதுகாப்பில் கவனம்; விமானப்படை அதிகாரி பேச்சு
வான் பரப்பு பாதுகாப்பில் கவனம்; விமானப்படை அதிகாரி பேச்சு
ADDED : ஜூன் 05, 2025 01:26 AM

கோவை; விமானப்படை நிர்வாக கல்லுாரியில், இந்திய விமானப்படை பயிற்சி கமாண்டிங் அதிகாரி கோஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இவர், கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை ஆய்வு மேற்கொண்டார். கல்லுாரிக்கு வந்த அவருக்கு, கல்லுாரி கமாண்டன்ட் ஏர் கமாடோர் விகாஸ் வகி வரவேற்றார். தொடர்ந்து, அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து, கல்லுாரி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். விமானப்படை நிர்வாகக் கல்லுாரியில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளையும், அதன் முக்கிய பிரிவுகளையும் நேரில் பார்த்தார். நாட்டின் வான் பரப்பின் பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.