/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எல்லா விதிகளையும் ஏ.ஐ., மாற்றும் 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் விளக்கம் எல்லா விதிகளையும் ஏ.ஐ., மாற்றும் 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் விளக்கம்
எல்லா விதிகளையும் ஏ.ஐ., மாற்றும் 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் விளக்கம்
எல்லா விதிகளையும் ஏ.ஐ., மாற்றும் 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் விளக்கம்
எல்லா விதிகளையும் ஏ.ஐ., மாற்றும் 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் விளக்கம்
ADDED : செப் 02, 2025 05:53 AM

கோவை: கோவை எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'உருமாறும் இந்தியா மாநாடு - 2025' நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை வரவேற்று பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு கற்பனைத்திறனை வளர்க்கவும், புத்தாக்கங்களுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது.
''தொழில்துறையில் வளர்ச்சிக்கான முன்னேற்றங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெரும் பங்களிக்கிறது,'' என்றார்.
'ஏசியன் பெயின்ட்ஸ்' கோ புரோமோட்டர் ஜலஜ் தானிபேசுகையில், ''ஏ.ஐ., பயன்படுத்துவது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும். விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த, ரோபோக்கள், ஏ.ஐ., பயன்படுத்தப்படுகின்றன,'' என்றார்.
'வெப்வேதா' நிறுவனர் அங்கூர் வாரிக்கூ பேசுகையில், ''ஏ.ஐ.,யால் ஒரு உள்ளடக்கத்தை நேர்த்தியாக உருவாக்க முடியும். மனிதனால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தின் தன்மையை, ஏ.ஐ.,யால் கொடுக்க முடியாது.
''எதிர்காலத்தில், மருத்துவ வளர்ச்சி காரணமாக, 150 முதல் 200 ஆண்டுகள் வரை மனிதன் வாழக்கூடும். இது, தற்போதைய வாழ்க்கையின் எல்லா விதிகளையும் மாற்றும்,'' என்றார்.
இந்திய கலைஞர் ஹர்ஷித் அகர்வால் பேசுகையில், ''இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, கலைஞர்களுக்கு புதிய ஊடகமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு, பல்வேறு கலை படைப்புகள் உருவாகின்றன,'' என்றார்.
தொழில்முனைவர் ராகுல் ஜான் ஆஜு பேசுகையில், ''ஏ.ஐ., எவ்வளவு தரவுகளை கொடுத்தாலும், மனிதர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களோடு ஒப்பிடும்போது, அது குறைவு. அனுபவம் மற்றும் படைப்பாற்றல் மிகவும் தனித்துவமானது. செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சேவை செய்யும் என்பதை நம் ஆர்வமும், தேர்வும் தீர்மானிக்கின்றன,'' என்றார்.
திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ''ஒரு கதையை ஏ.ஐ., எழுத முடியாது. திரைப்படங்களில் தொழில்நுட்ப உதவியாக இருக்கிறது. நேரம் மிச்சமாகிறது.
''கலைஞர் தேர்வு, ஸ்டோரி போர்டு போன்றவற்றிலும் உதவும். புதிய தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் செயலர் மோகன்தாஸ், இயக்குநர்கள் ஸ்ரீஷா, நித்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாடு நாளை நிறைவடைகிறது.