/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
ADDED : ஜூன் 16, 2025 09:48 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆடி பட்டம் விதைக்க தேவையான சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள் ஆகியவை, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, வேளாண்துறையினர் அறிவித்துள்ளனர்.
உளுந்து, சோளம், கொள்ளு ஆகியன விதைக்க ஆடி மாதம் சிறந்தது. கோவை வடக்கு பகுதியில் ஆடிப்பட்டத்தை ஒட்டியே அதிக விவசாயம் நடக்கிறது. குறிப்பாக, சோளம் பயிரிடும் விவசாயிகள் ஆடிப்பட்டத்தை தேர்ந்தெடுத்து பயிரிட முன் வருவர். இதற்காக சான்று பெற்ற சோளம் விதைகள், 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு தயாராக பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலகத்தில் உள்ளது. கோ.எஸ். 32 என்ற சான்று பெற்ற சோளம் விதை, தீவனம் மற்றும் கதிர் பிடித்தலுக்கான ரகத்தைச் சேர்ந்தது.
இதே போல சான்று பெற்ற புது ரக உளுந்து விதை, கொள்ளு விதைகள், மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. மேலும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளன. விதைகள், மானிய விலையில் தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். தனித்துவ அடையாள எண் பெறாத விவசாயிகள் நேரடியாக அலுவலகம் வந்தால், அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் உருவாக்கி கொடுத்து, மானிய விலையில் விதைகள், உயிர் உரங் கள் வழங்கப்படும் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.