/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா சிறப்பு!சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா சிறப்பு!
சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா சிறப்பு!
சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா சிறப்பு!
சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா சிறப்பு!
ADDED : ஜன 06, 2024 11:00 PM

கோவை;கோவை நீலாம்பூர் அருகே உள்ள சக்தி இன்ஜி.,மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 'சக்தி வேளாண் திருவிழா 2024' நேற்று துவங்கியது. ரேக்ளா பந்தயத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.
துவக்க நாளான நேற்று, காங்கேயம் காளை மாடுகள், நாட்டு நாய் கண்காட்சி, வேளாண் பொருட்கள், உணவு தானியங்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ, மாணவியர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். விவசாயத்தின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவது மட்டுமின்றி, கிராமங்களின் நிலையை காட்டுவதாக அமைந்தது.
இரண்டாம் நாளான இன்று, ரேக்ளா பந்தயம் நடக்கிறது. வெற்றி பெறுவோருக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. இரண்டு நாட்களிலும் தமிழ்நாட்டு பாரம்பரிய நடனம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி தலைவர் தங்கவேலு நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார்.