Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த அறிவுரை

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த அறிவுரை

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த அறிவுரை

சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த அறிவுரை

ADDED : மே 27, 2025 09:07 PM


Google News
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டுமென, வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை, காய்கறி மற்றும் பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் பலர் தங்கள் பயிர்களுக்கு டி.ஏ.பி., உரத்தை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, டி.ஏ.பி., உரத்தின் விலை அதிகமாக இருப்பதால், இதற்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

டி.ஏ.பி., உரம் மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்தும்போது குறைவான உப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்து பயிர்களில், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது.

எனவே, டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மட்டும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம், என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அருள்கவிதா மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us