/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மண் ஈரம் பொருத்து நீர்பாசனம் செய்ய அறிவுரைமண் ஈரம் பொருத்து நீர்பாசனம் செய்ய அறிவுரை
மண் ஈரம் பொருத்து நீர்பாசனம் செய்ய அறிவுரை
மண் ஈரம் பொருத்து நீர்பாசனம் செய்ய அறிவுரை
மண் ஈரம் பொருத்து நீர்பாசனம் செய்ய அறிவுரை
ADDED : ஜன 27, 2024 12:10 AM
கோவை: கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால், மண் ஈரத்தினை பொருத்து இறவை பயிர்களுக்கு நீர் பாசனம் செய்து, பயிர் கழிவு மூடாக்கு செய்ய, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வரும் ஐந்து நாட்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை, 31-32 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரத்தில் 21-22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் இருக்கும். நிலவும் குளிர் வெப்பநிலையில், பூக்கும் நிலையில் உள்ள நெற்பயிரில் மணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்கவும். தற்போதைய வானிலையை பயன்படுத்தி, நீர்பாசனம் உள்ள இடங்களில், மட்டும் இறவை மக்காச்சோள விதைப்பினை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


