/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஆதியோகி ரத யாத்திரைமஹாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஆதியோகி ரத யாத்திரை
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஆதியோகி ரத யாத்திரை
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஆதியோகி ரத யாத்திரை
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஆதியோகி ரத யாத்திரை
ADDED : பிப் 24, 2024 08:45 PM
மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென்கயிலாய பக்தி பேரவை சார்பில் நாளை முதல் மார்ச் 6- வரை, ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடக்கிறது.
இது குறித்து, தென்கயிலாய பக்தி பேரவை தன்னார்வலர்கள் வள்ளுவன், உன்னிகிருஷ்ணன் மற்றும் தினகரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை ஈஷா யோகா மையத்தில், 30வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா, வரும் மார்ச் 8ல் கோலாகலமாக நடக்கிறது.
இவ்விழாவில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அதன்படி நாளை(பிப்.,26) பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் ஆதியோகி ரதம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், வடவள்ளி என, கோவையில் பல்வேறு பகுதிகளில் மார்ச் 6-ம் தேதி வரை வலம் வருகிறது.
ஈஷாயோகா மையத்திற்கு நேரில் வந்து, ஆதியோகியை தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே, ஆதியோகியை தரிசித்து அருள் பெறலாம். இந்தாண்டு, கோவையை தவிர்த்து தமிழ்நாட்டின் 36 இடங்களில், ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு மூலம் கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.