/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டனபொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன
ADDED : பிப் 24, 2024 12:23 AM

கோவை:கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை 2019ல், பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருநாவுக்கரசு, 28, சபரிராஜன், 25, சதீஷ், 31, வசந்தகுமார், 31, உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, 2019, மே 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதே ஆண்டு, நவ., 10ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு, பிப். 24 முதல், சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை கோர்ட் வளாகத்தில் ஒதுக்கப்பட்ட தனி அறையில், ஆன்லைன் வாயிலாக, 'இன்கேமரா' விசாரணையில் சாட்சியம் பெறப்படுகிறது.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும், சேலம் சிறையிலிருந்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஒன்பது பேருக்கும் நேற்று, கூடுதல் ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட்டன.
சி.டி.,க்களை காப்பி செய்து வழங்க இயலாத காரணத்தால், அவற்றை நீதிமன்ற அறையில் அவர்கள் பார்க்கும் வகையில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை, மார்ச் 1க்கு ஒத்திவைக்கப்பட்டது.