/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம்
கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம்
கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம்
கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம்
ADDED : ஜூன் 13, 2025 09:43 PM
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், மாதந்தோறும் சுமார் 50 புதிய வழக்குகள் வீதம், ஆண்டுக்கு, 600 வழக்குகள் வரை தாக்கல் செய்யப்படுகிறது. மாதந்தோறும் 30-40 வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
ஆண்டு தோறும் அதிக வழக்கு தாக்கல் செய்யப்படுவதால், நிலுவை வழக்கு எண்ணிக்கை அதிகரிக்கிறது. கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 360 வழக்குகள், 170 நிறைவேற்று மனுக்கள் உள்பட மொத்தம், 530 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வழக்கை விரைந்து விசாரிக்க, கோவையில் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் ஆணையம் செயல்படுவதற்கு தேவையான அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. கூடுதல் குறைதீர் ஆணைய தலைவராக தட்சிணாமூர்த்தி, உறுப்பினராக சுகுணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் விசாரணை நடைபெறும்.
மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், கூடுதல் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விரைவில் விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- நமது நிருபர் -