/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்; கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தல்வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்; கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தல்
வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்; கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தல்
வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்; கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தல்
வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்; கூடுதல் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 30, 2024 10:22 PM
சூலூர்;ஊராட்சிகளில் நடக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன் பேசினார்.
சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சூலூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர்கள் பேசுகையில், 'வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதிதாக துவக்க உள்ள பணிகளுக்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். கோடை காலம் துவங்க உள்ளதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப குடிநீர் வழங்க வேண்டும்,' என்றனர்.
கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன் தலைமை வகித்து பேசுகையில், 'சில ஊராட்சிகளில் சில பணிகள் முடங்கி உள்ளது. அவற்றை விரைவுபடுத்த வேண்டும். அதிகாரிகள் அனைத்து ஒத்துழைப்பும் வழங்குவர். நிதிக்குழு மானிய திட்டப்பணிகளை விரைந்து துவக்கவேண்டும்.
பிப்., மாத இறுதிக்குள் ஏற்கனவே நடக்கும் பணிகளை முடிக்க வேண்டும். ஊராட்சிகளில் தானியங்கி முறை மூலம் குடிநீர் சப்ளை செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலம் குடிநீர் விரயமாவதும், மின் கட்டணமும் குறையும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து பணிகளையும் விரைவுபடுத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். செயற்பொறியாளர் அருண், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி திட்ட அலுவலர் காசிநாதன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பசீர் அகமது, சூலூர் பி.டி.ஓ.,க்கள் சிவகாமி, முத்துராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.