/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை: ஜல் சக்தி துறை இணை அமைச்சர் உறுதிநொய்யல் நதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை: ஜல் சக்தி துறை இணை அமைச்சர் உறுதி
நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை: ஜல் சக்தி துறை இணை அமைச்சர் உறுதி
நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை: ஜல் சக்தி துறை இணை அமைச்சர் உறுதி
நொய்யல் நதி மேம்பாட்டுக்கு நடவடிக்கை: ஜல் சக்தி துறை இணை அமைச்சர் உறுதி
ADDED : ஜன 11, 2024 12:27 AM

கோவை : கோவை, நேரு நகர் அருகே நேற்று நடந்த, 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் விவகாரம் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஷ்வர் டிடு பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் போது இணை அமைச்சரை சந்தித்த, சிறுதுளி அமைப்பினர் வாலாங்குளத்துக்கு வருகை தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர், வாலாங்குளக்கரையில் ஆய்வு செய்தார். பின்னர், அருகே சிறுதுளி அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு நொய்யல் நதியை மேம்படுத்துவதில் சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து, சிறுதுளி அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் ராஜேஷ் கோவிந்தராஜூலு கூறியதாவது:
வாலாங்குளம் வருகை தந்த இணை அமைச்சர், குளத்து நீர் ஏன் இப்படி கறுப்பு நிறத்தில் இருக்கிறது என, கேள்வி எழுப்பினார். கோவையில் உள்ள குளங்களின் நிலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு குறித்து விளக்கினோம்.
மத்திய அரசு, நதி நீர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்த அவர், டில்லி ஜல் சக்தி துறையில் இருந்து, குழு ஒன்றை கோவைக்கு அனுப்பி, நொய்யல் நதியை ஆய்வு செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., மாநில துணை தலைவர்(வர்த்தக பிரிவு) செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.