/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்; களப்பணியில் பா.ஜ., தீவிரம்லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்; களப்பணியில் பா.ஜ., தீவிரம்
லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்; களப்பணியில் பா.ஜ., தீவிரம்
லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்; களப்பணியில் பா.ஜ., தீவிரம்
லோக்சபா தேர்தலுக்கு அச்சாரம்; களப்பணியில் பா.ஜ., தீவிரம்
ADDED : ஜன 11, 2024 12:23 AM
கோவை : அடுத்து ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பா.ஜ.,களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து, பா.ஜ.,கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:
கோவை லோக்சபா தொகுதி மூன்று சட்டசபை தொகுதிகளையும், 1,307 பூத்களையும் கொண்டுள்ளது. இதை பா.ஜ.,21மண்டலங்களாகவும், 77 டிவிசன்களாகவும்,1,307 பூத்களாகவும் பிரித்துள்ளது.
பா.ஜ., ஒவ்வொரு பூத்களாக சென்று பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தெளிவுபடுத்தி வருகிறது.
மத்திய அரசின் பத்தாண்டு சாதனைகளை சொல்வதோடு, அடுத்த கட்டமாக நம் தேசத்தை சர்வதேச அளவில் வல்லரசாக உயர்த்த, மேற்கொண்டு வரும் முயற்சிகளை சொல்ல வேண்டும்.
வரும் தேர்தலில் பா.ஜ.,வெற்றி பெற்று, ஆட்சிபீடத்தில் அமர்ந்தால் நாட்டு மக்களின் தரம் எப்படி எல்லாம் உயரும், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்று அனைத்து துறையிலும் எப்படி உயர்ந்து நிற்கும் என்பதை, மக்களுக்கு விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான காணொளி காட்சிகளை, இணையம் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கும் நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டிவிசன் தோறும் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.
டிவிசன்கள் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதே சமயம் மத்திய அமைச்சர்கள் பியுஸ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன.
இவ்வாறு, ரமேஷ்குமார் கூறினார்.