/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அன்னுாரில் சாலை குழிகளால் அதிகரிக்கும் விபத்துகள் அன்னுாரில் சாலை குழிகளால் அதிகரிக்கும் விபத்துகள்
அன்னுாரில் சாலை குழிகளால் அதிகரிக்கும் விபத்துகள்
அன்னுாரில் சாலை குழிகளால் அதிகரிக்கும் விபத்துகள்
அன்னுாரில் சாலை குழிகளால் அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : மே 26, 2025 05:06 AM

அன்னுார்; அன்னுாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட குழிகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 25,000க்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. அன்னுார் நகரில் 190 மீ., நீளத்திற்கு, கடைவீதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இதில் மூன்று இடங்களில் பிரதான குழாய் பழுது பார்க்க தார் சாலையை சேதப்படுத்தி குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழி மூடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் சேதப்படுத்தப்பட்ட தார் சாலை மீண்டும் போடப்படவில்லை.
வாகனங்களில் வேகமாக வருவோர் திடீரென குழியை பார்த்தவுடன் வண்டியை நிறுத்துகின்றனர். அல்லது வலது புறம் ஒதுங்குகின்றனர். இதை எதிர்பாராமல் அந்த வாகனத்தின் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. கைகாட்டி அருகே, ஓதிமலை ரோடு சந்திப்பு பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே என மூன்று இடங்களில் குழிகள் உள்ளன.
'தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் குழிகளில் தார் சாலை அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.