/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்தில்லா தொழிற்சாலை விருது; ரூட்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு விபத்தில்லா தொழிற்சாலை விருது; ரூட்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
விபத்தில்லா தொழிற்சாலை விருது; ரூட்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
விபத்தில்லா தொழிற்சாலை விருது; ரூட்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
விபத்தில்லா தொழிற்சாலை விருது; ரூட்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
ADDED : மே 30, 2025 12:25 AM

கோவை; ரூட்ஸ் நிறுவனத்தின் ஆட்டோ பிராடக்ட்ஸ் டிவிசன் கடந்த, 1000 நாட்களாக எவ்வித விபத்துக்களும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருவதை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு தொழிற்சாலையில் நடந்தது.
இதில், தொழிற்சாலை இணை இயக்குனர் வினோத்குமார் பங்கேற்று பணியாளர்களை பாராட்டி விருது வழங்கினார். தொடர்ந்து, பணியிட பாதுகாப்பின் முக்கியத்துவம், விபத்துக்கள் தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில், நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன், இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், முதன்மை இயக்க அதிகாரி ராமதிலக் மற்றும் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.