Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ரோட்டோரத்தில் அச்சுறுத்தும் மரக்கிளை

ADDED : அக் 07, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நெகமம், :நெகமம், எம்மேகவுண்டன்பாளையம் ரோட்டோரம் சாய்ந்த நிலையில் இருக்கும் மரத்தின் கிளை முறிந்ததால் வாகனம் ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நெகமம் அருகே உள்ள, எம்மேகவுண்டன்பாளையத்தில் இருந்து பட்டணம் செல்லும் ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் கீழே விழும் நிலையில் மரம் உள்ளது. இந்த மரத்தின் ஒரு பகுதியில் கிளை முறிந்து கீழே சாய்ந்துள்ளது.

இதனால், ரோட்டில் செல்லும் பைக் ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்கும் போது அச்சத்துடன் செல்கின்றனர். இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போதும் மரத்தில் உரசுகின்றன. வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி அச்சுறுத்தும் மரக்கிளையை வெட்டி அகற்றம் செய்ய வேண்டும் அல்லது மரத்தை மாற்று இடத்தில் மறு நடவு செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us