/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிலம்பத்தில் கலக்கிய இந்துஸ்தான் மாணவர்சிலம்பத்தில் கலக்கிய இந்துஸ்தான் மாணவர்
சிலம்பத்தில் கலக்கிய இந்துஸ்தான் மாணவர்
சிலம்பத்தில் கலக்கிய இந்துஸ்தான் மாணவர்
சிலம்பத்தில் கலக்கிய இந்துஸ்தான் மாணவர்
ADDED : ஜன 06, 2024 10:58 PM

கோவை;இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர், ரூபேஷ் குமார். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலம்ப போட்டிகளில் பரிசுகளை வென்று வருகிறார்.
சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொண்டு, தங்கம், வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், பள்ளி அளவிலான சிலம்ப போட்டியில் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
பதக்கம் வாங்கிய மாணவர் ரூபேஷ்குமாரை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி ஆகியோர் பாராட்டினர்.