/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சற்றே ஓய்வெடுத்த மழை! சிறுவாணியில் 38.77 அடி கோவையின் தாகம் தீரும் சற்றே ஓய்வெடுத்த மழை! சிறுவாணியில் 38.77 அடி கோவையின் தாகம் தீரும்
சற்றே ஓய்வெடுத்த மழை! சிறுவாணியில் 38.77 அடி கோவையின் தாகம் தீரும்
சற்றே ஓய்வெடுத்த மழை! சிறுவாணியில் 38.77 அடி கோவையின் தாகம் தீரும்
சற்றே ஓய்வெடுத்த மழை! சிறுவாணியில் 38.77 அடி கோவையின் தாகம் தீரும்
ADDED : ஜூன் 01, 2025 11:01 PM
கோவை : சிறுவாணி அணைப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை சற்று ஓய்ந்தது. அணை நீர்மட்டம், 38.77 அடியாக இருந்தது.
தமிழக - -கேரள எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரம். அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி.
மே மாத துவக்கத்தில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம், 17 அடியாக இருந்தது.
தொடர்ந்து, மே 18 முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், ஒரே நாளில் இரண்டு அடி, நான்கு அடி என மளமளவென நீர்மட்டம் அதிகரித்தது.
நேற்று முன்தினம் அடிவாரத்தில், 14 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில் 30 மி.மீ., மழை பதிவானது. நீர்மட்டம் 38.28 அடியாக உயர்ந்தது.
குடிநீர் தேவைக்காக, 8.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்திலும், அணைப்பகுதியிலும் மழை பெய்யவில்லை.
நீர்மட்டம் 38.77 படியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 8.8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.