/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காய்ச்சல் அறிகுறியா? கண்காணிக்க உத்தரவுகாய்ச்சல் அறிகுறியா? கண்காணிக்க உத்தரவு
காய்ச்சல் அறிகுறியா? கண்காணிக்க உத்தரவு
காய்ச்சல் அறிகுறியா? கண்காணிக்க உத்தரவு
காய்ச்சல் அறிகுறியா? கண்காணிக்க உத்தரவு
ADDED : ஜன 10, 2024 10:20 PM
பொள்ளாச்சி : மழைக்காரணமாக, காய்ச்சல், சளி பாதிப்புடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதோடு, விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருத்தல், வகுப்பறைக்குள் மாணவர்கள் படிப்பதை உறுதி செய்தல், இடிக்கப்பட வேண்டிய நிலையில் கட்டடங்கள் இருந்தால், மாணவர்கள் அப்பகுதிக்கு செல்லாமல் இருக்க தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட, பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தினசரி மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவு பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்றப்படுகிறது. இதில், காய்ச்சல், சளி தொற்று காரணங்களால் விடுப்பு எடுப்போர் விபரங்களை, குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், அரசு, உதவிபெறும் பள்ளிகளில், காய்ச்சல், சளி தொற்றுடன் மாணவர்கள் வருகைப்புரிந்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொடர்ந்து விடுப்பு எடுப்போர் பட்டியலை, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.