Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு கைகொடுக்கும் களப்பயணம்

மாணவர்களுக்கு கைகொடுக்கும் களப்பயணம்

மாணவர்களுக்கு கைகொடுக்கும் களப்பயணம்

மாணவர்களுக்கு கைகொடுக்கும் களப்பயணம்

ADDED : அக் 22, 2025 10:08 PM


Google News
மேட்டுப்பாளையம்: காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க தூண்டும் வகையில் களப்பயணம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பிறகு உயர் கல்வி படிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு கலை கல்லூரி, உள்ளிட்டவைகளுக்கு அண்மையில் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு அரசு கல்லூரிகளில் கிடைக்கும் பயன்கள் குறித்தும், மாணவர்களுக்கு மேற்படிப்பு மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் விழிப்புணர்வை வழங்கினர். இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறுகையில், இதுபோன்ற களப்பயணங்களால் மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை நேரடியாகவே அதிகாரிகள், ஆசியர்கள் உள்ளிட்டோர்களிடம் கேட்டு பயன்பெறுகின்றனர்.

அடுத்து என்ன படிக்கலாம், எப்படி படிக்கலாம் அரசு உதவிகள் என்ன என்பதை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்த களப்பயணம் நன்கு கைக்கொடுக்கிறது, என்றார்.--------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us